மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு, திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 29) இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

வெங்கடேசனுக்கு அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதால் அனிதா அவரது தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.

பின்னர் வெங்கடேசன் அங்கு சென்று சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த அழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேசன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் அனிதாவிடம் நடத்தை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு ஆத்திரமடைந்த வெங்கடேசன், அனிதாவை கத்தியால் சரமாரியாக குத்தியதில் பலத்த காயமடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறி அடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார். 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்த வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடத்தையில் சந்தேகம் அடைந்து கணவன், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu husband arrested for wife murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->