சென்னையில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை! - Seithipunal
Seithipunal


சென்னை மண்ணடியில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மண்ணடியில் லிங்கி செட்டி தெருவை சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் கையில் ரூ.50 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நவாஸ்கானிடம் ரூ.50 லட்சம் பணம் இருப்பதை அறிந்த மர்ம கும்பல் நவாஸ்கானை பின்தொடர்ந்து  அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நவாஸ்கானை வெட்டி ரூபாய் 50 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கத்தியால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் துடித்த நவாஸ்கானை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பெரில் வடக்கு கடற்கரை போலீசார் மருத்துவமனைக்கு சென்று  நவஸ்கானிடம் இது தொடர்பாக விசாரணை செய்தனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai a teenager was cut with a knife and robbed of Rs 50 lakh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->