போலி கடவுசீட்டில் இலங்கை செல்ல வந்த இரண்டு பெண்கள் கைது.!
chennai airport two womans arrested for duplicate paasport
தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. அந்தவகையில் இலங்கை யாழ் பாணத்துக்கு செல்லும் அலையன்ஸ் ஏர் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணிகளின் கடவுசீட்டு மற்றும் ஆவணங்களை, விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தப்போது சென்னை முகவரியில், இந்திய கடவுசீட்டுடன் சுற்றுலாப் பயணிகள் விசாவில் இரண்டு பெண்கள், யாழ்ப்பாணம் செல்வதற்காக வந்திருந்தனர். அந்த இரண்டு பெண் பயணிகள் மீதும் குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தின் பேரில் அவர்களுடைய கடவுசீட்டுகளை கம்ப்யூட்டர் மூலமாக ஆய்வு செய்தபோது, இரண்டுமே போலியான கடவுசீட்டுகள் என்று தெரிய வந்தது. இதனால், இரண்டு பெண்களின் பயணங்களையும், குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
பின்னர் இவர்களை போலீசார் விசாரணை செய்ததில், இவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் விசாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து போலியான இந்திய கடவுசீட்டுகளைப் பெற்றதும், அதன் மூலம் தற்போது சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல முயன்றதும் தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து இவர்களுக்கு போலி கடவுசீட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜெண்டு யார்? இந்த பெண்கள் எங்கு தங்கி இருந்தனர்? என்று குடியுரிமை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.
English Summary
chennai airport two womans arrested for duplicate paasport