சென்னை விமான நிலையம் : போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்ய முயன்ற பெண் கைது.!
chennai airport woman arrested for duplicate passport
சென்னையில் இருந்து டாக்காவிற்கு செல்லும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்நிலையில், பயணம் செய்ய வந்த பயணிகளின் கடவுசீட்டு மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அங்கு, இந்திய பாஸ்போர்ட்டுடன் ரீனா பேகம் என்ற பெண் சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்தார். ஆனால் அவர் வைத்திருந்த கடவுசீட்டு மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அதன் படி, அந்த கடவு சீட்டை சோதனை செய்ததில், அது போலியான கடவுசீட்டு என்று தெரியவந்தது. இதன்காரணமாக ரீனா பேகத்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர் வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்தியாவில் போலி கடவுசீட்டு தயார் செய்து கொடுக்கும் ஏஜென்டுகள் மூலம், பணம் கொடுத்து போலி கடவுசீட்டை வாங்கியது தெரியவந்தது.
அதன் பின்னர், போலீசார் இவர் எதற்காக இந்திய வந்தார் ? போலி கடவு சீட்டு செய்து கொடுத்தது யார்? உள்ளிட்ட பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, கியூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய உளவு பிரிவு போலீசார் விசாரணை செய்தனர்.
இதைஎடுத்து, ரீனாபேகம் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ரீனாபேகம் விசாரணைக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதை போல் கடந்த வாரம் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி கடவுசீட்டு மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார். வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி கடவுசீட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
chennai airport woman arrested for duplicate passport