சென்னை பேருந்து நிலையத்தில் ஒரு வயது குழந்தை மரணம்!
chennai bus station one year body died
திருவண்ணாமலை மாவட்டத்தை சூர்யா மற்றும் சிவகன்னி தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தைக்கு 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
குழந்தையை மருத்துவமனையில் பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. குழந்தையின் மேல் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் சூர்யா குடும்பத்துடன் சென்னைக்கு சென்றனர்.
சென்னையில் சூர்யா கூலிவேலை செய்து கொண்டு கோயம்பேடு மாநகர பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் எற்பட்டு, சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது. இதனால் தாய் சிவகன்னி பேருந்து நிலைய நடைமேடையில் அமர்ந்து இறந்த குழந்தையின் உடலை கையில் வைத்து கதறி அழுதார்.
சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்ததை பார்த்த பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து, பேருந்து நிலைய காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் இது குறித்து சூர்யா மற்றும் அவரது மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு தொற்றுக் கொண்டது.
English Summary
chennai bus station one year body died