சென்னை கார் பந்தயத்தை நிறுத்த கோரிய அவசர வழக்கு - அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் அமைப்புடன் சென்னையில் கார் பந்தயம் நடத்த ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்ட இந்த கார் பந்தயம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வருகின்ற 31ஆம் தேதி நடக்க உள்ளது. 

இந்நிலையில், இந்த கார் பந்தயத்தை நிறுத்த வேண்டும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த கார் பந்தயம் நடக்க உள்ளதாக, அதிமுக மற்றும் சென்னை சேர்ந்த சில சமூக ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

மேலும், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார் 

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் இருக்கும் பகுதியில் இந்த கார் பந்தயம் நடப்பதால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே இந்த கார்பந்தயத்தை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு தலைமை நீதிபதி கார் பந்தயத்தை நிறுத்த கூறியதை எல்லாம் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இந்த வழக்கு 29 அல்லது 30 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Car Race SC Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->