வெடிகுண்டா? சென்னையின் முக்கிய பகுதியில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னை சென்ட்ரல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கூறிவிட்டு அழைப்பை கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தான் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், இது ஒரு வதந்தி என்றும் தெரியவந்துள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், போலீசார் மோப்பநாய் உடன் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிறிது பதற்றம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai Central railway station bomb thread


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->