#BigBreaking :: சென்னை மாநகரப் பேருந்து சேவை ரத்து..!! போக்குவரத்து துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுவிழந்து வட தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் புயல் கரையை கடக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், மூன்று மணி நேரத்திற்கு பின்பும் இயக்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னை மாநகர பேருந்துகள் இரவு நேரங்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 550 பேருந்துகள் இன்று இரவு இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai City Bus Service Cancelled tonight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->