தரை பாலத்தில் சிக்கிக்கொண்ட சென்னை மாநகர பேருந்துகள்! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதை எடுத்து நேற்று முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய மழையானது இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் முறையச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பெரம்பூர் ரயில்வே தரைப்பாளத்தின் வழியாகச் சென்ற மாநகர அரசு பேருந்து மழை நீரில் சென்றது. அப்பொழுது இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்ததால் மாநகரப் பேருந்து பழுதாகி நடு வழியில் நின்று விட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்க உள்ளாகினர். இடுப்பு அளவுக்கு மேல் மழை நீர் தேங்கியதால் பயணிகளை மீட்க சிரமம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைத்து பயணிகளையும் மீட்டுள்ளனர்.

இதேபோன்று வியாசர்பாடி ரயில்வே தரைப்பாளத்தின் கீழ் அதிகளவிலான மழை நீர் தேங்கியது. அந்த வழியாகச் 64சி எண் கொண்ட மாநகர பேருந்து மழைநீரில் சிக்கி பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பேருந்து நிலையையே சிக்கிக்கொண்டனர். பேருந்தை எடுக்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளையும் பேருந்தையும் மீட்டுள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்கள் வாகனங்களில் பயணம் மேற்கொள்ள சிரமம் ஏற்படுவதால் மாநகர பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது மாநகர பேருந்துகளும் ஆங்காங்கே நடுவழியில் மழை நீரில் சிக்கி உள்ளதா மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சென்னை மாநகராட்சி புறநகர் பகுதியில் உள்ள பயணி தேங்கும் இடங்களை கண்டறிந்து விரைந்து சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai city buses stuck on the railway ground bridge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->