வெயில் ஸ்டாப் , ரெயின் ஸ்ட்ராட்...சென்னையில் பல்வேறு பகுதியில் மழை!! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில்  வாட்டிவந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஜூன் 13ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெயில் காலை முதலை குலுக்கி வந்த நிலையில், தற்போது மதுரவாயில், போரூர், ஆலப்பாக்கம், பட்டினப்பாக்கம் மயிலாப்பூர் சேப்பாக்கம் அடையார் திருவான்மியூர் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai climate change rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->