மறக்குமா நெஞ்சம் மோசடி! ஏ.சி.டி.சி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கடந்த செப்டம்பர் 10ம் தேதி சென்னை அடுத்த பனையூரில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியை ஏசிடிசி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. காவல்துறையினரிடம் 20 ஆயிரம் பேருக்கு அனுமதி பெற்ற நிலையில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இசை நிகழ்ச்சியை பார்க்க அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக பலர் புகார் தெரிவித்தனர். மேலும் இசை நிகழ்ச்சியை காண வந்த பெண்களை சிலர் கண்ட தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

மேலும் இசை நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையைச் சேர்ந்த இரு முக்கிய அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் குளறுபடி நடந்துள்ளதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10% கேளிக்கை வரியை செலுத்தாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா நகரில் உள்ள ஏ.சி.டி.சி நிறுவனத்தில் அலுவலகத்திற்கு நேரில் சென்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி தற்போது வரியைப்பு புகாரிலும் சிக்கி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corp sent notice to ACTC company regards tax issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->