மக்களிடம் கருத்து கேட்கும் சென்னை மாநகராட்சி...! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள பூங்காக்களை பொது மக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது குறித்து, பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி பூங்காத் துறையின் சார்பில், 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் தனியாரிடமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களை பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது குறித்து, பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இணையதளத்தில், GCC Parks Survey | பூங்கா சர்வே என்ற இணைப்பில் பொதுமக்கள்  கருத்துகளை தெரிவிக்கலாம்.

அந்த இணைப்பில், பூங்கா பயன்பாடு, பிடித்தமான அம்சம், மேம்படுத்த வேண்டியது, பாதுகாப்பான பூங்காவாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில், வரும் 15-ம் தேதி பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corperation some questions people for park


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->