அதிக கமிஷன், அதிகார துஷ்பிரயோகம் - திமுக கவுன்சிலர்களின் பதவி தப்பும்? பரபரப்பில் சென்னை மாநகராட்சி! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை மிரட்டி, தாக்குதல் நடத்தி, அதிக கமிஷன் கேட்டதாக ஐந்து கவுன்ஸ் சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஐந்து கவுன்சிலர்களுக்கு விளக்கம் கேட்டு, நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதில், 

29-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் (தி.மு.க.), 
189-வது வார்டு கவுன்சிலர் பாபு (தி.மு.க.), 
195-வது வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம் (தி.மு.க.) ஆகியோருக்கும் அதிமுக கவுன்சிலர் ஒருவருக்கும் நோட்டீஸ் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் பெண் கவுன்சிலர் ஒருவரும் இதில் சம்பந்தப்பட்ட உள்ளதாகவும், அவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் மிக ரகசியமாக நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கவுன்சிலர்களும் சற்று கலக்கத்தில் உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப் போகிறார்களோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முறைகேடு மற்றும் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களின் பதவியை பறிப்பதில் ஏற்கனவே சட்ட சிக்கல்கள் இருந்த நிலையில், தற்போது அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால், உடனடியாக கவுன்சிலர்களின் பதவியை பறிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ஐந்து கவுன்சிலர்களின் விளக்கத்தை பொருத்தே அவர்களின் பதவி பறிக்கப்படுமா? அல்லது எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலுடன் விட்டுவிடுவார்களா என்பது தெரியவரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corporation Councillors Notice Complaint 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->