சௌமியா அன்புமணியின் கோரிக்கை சரியானதாச்சே, மேயர் பிரியாவின் மின்னல் வேக அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரைவு செயல்திட்டம் தயாரிக்க பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி மீண்டும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

சென்னை மாநகரம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஐந்தாவது பெரு நகரமாக உள்ளது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமாக்களுக்கு ஏற்ப இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும். பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலை காண செயல் திட்டத்தை தயாரிக்க C 40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் இணைந்துள்ளது. 

C 40 நகரங்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் காலநிலை செயல்திட்டத்தை தயாரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு செயல் திட்டம் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு செயல்திட்ட பரிந்துரைகள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை chennaiclimateactionplan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 26 9 2022க்குள் தெரிவிக்கும்படி வரைவு செயல்திட்ட பரிந்துரை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வரைவு செயல்திட்ட பரிந்துரை தமிழ் பதிவாக இணையதளத்தில் 27/9/2022 அன்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை 26 10 2022 வரை தெரிவிக்கும் வகையில் ஒரு மாத காலத்திற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : சென்னையை காப்பாற்ற, அக்கறையுடன் அறிக்கையோடு வந்த சௌமியா அன்புமணி! இவ்வளவு விஷயம் இருக்கா என வாயடைத்து நின்ற மேயர் பிரியா! 

பொதுமக்களின் கருத்தை கேட்டு சென்னை மாநகராட்சி செப்டம்பர் 26ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்த நிலையில், நேற்று செப்டம்பர் 26ம் தேதி பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சென்னை மாநகர மேயர் பிரியாவை சந்தித்து, மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். 200 வார்டுகளிலும் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். வரைவு அறிக்கையை தமிழில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், புத்தகங்களாக கொடுக்க வேண்டும் மேலும் மக்களின் கருத்துக்களை கேட்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். 

அவர் சந்தித்து சென்ற சிறிது நேரத்திலேயே மேற்கண்ட தமிழில் வெளியிடப்படும் எனவும், காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகவும் அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அறிவிப்பில் சொன்னது போலவே செப்டம்பர் 27 ஆன இன்று வரைவு செயல் திட்ட அறிக்கையானது தமிழிலும் தெரிவிக்கப்பட இருக்கிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai corporation extend the date to people opinion for climate change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->