சென்னை : ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகையை மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர் - குவியும் பாராட்டுக்கள்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் தூய்மைப் பணியாளர் ஒருவர், தவறுதலாக குப்பையில் கொட்டப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை பத்திரமாக மீட்டுக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ராஜமன்னார் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் இன்று (ஜூலை 21) காலை குப்பை கொட்டும்போது தவறுதலாக, குப்பையுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸையும் போட்டுள்ளார். 

வழக்கமாக மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்க வரும் அர்பேசர் ஸ்மித் நிறுவனத்தைச் சேர்ந்த குப்பை வாகனத்தில் தேவராஜ் தங்கள் வீட்டுக் குப்பைகளை இன்றும் வழக்கம் போல் கொட்டியுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து வீட்டில் வைத்திருந்த வைர நகை காணாமல் போயுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

ஒருவேளை குப்பை கொட்டும்போது அதில் தவறுதலாக நகையும் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்த தேவராஜ், உடனடியாக அர்பேசர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைத் தெரிவித்து உதவி கோரியுள்ளார். 

இதையடுத்து உடனடியாக விருகம்பாக்கம் பகுதியில் வழக்கமாக குப்பை சேகரிக்கும் வாகன ஓட்டுநரான அந்தோணி சாமி, அங்கு அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளில் தீவிரமாக சோதனை செய்து, குப்பையோடு கலந்து இருந்த வைர நெக்லஸைக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார். 

இதையடுத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் இந்த நேர்மை பொதுமக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் இதுகுறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corporation Worker Recovered The Lost Necklace Worth Rs 5 Lakh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->