சென்னையில் அக்.1 முதல் இந்த சேவை செயல்படாது! வெளியான முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை குடிநீர் வாரியத்திற்கு நுகர்வோர்கள் கட்ட வேண்டிய குடிநீர், கழிவு அகற்றுதல், இணைப்பு கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை அக்டோபர் 1ம் தேதி முதல் இ-சேவை மையங்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் வரைவு காசோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் வசூல் மையங்களில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் செயல்படாது எனவும், டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையானது சென்னை குடிநீர் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் உள்ள சென்னை குடிநீர் வாரியம் மண்டல அலுவலகங்களிலும் காசோலை மற்றும் வரைவோலை செலுத்துவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முகவர்கள் தங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு கொண்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai drinking water bills should be paid digitally only on Oct1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->