#சென்னை | எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து - ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன விபத்தில் ஒருவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வரும் நிலையில், இன்று பகல் 12 மணியளவில் இந்த நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஆலையை விட்டு வெளியே ஓடி வந்து உயிர்பிழைத்தனர்.

இருப்பினும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முதல்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவரின் கரிமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 52) என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் திரு.பெருமாள் அவர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெருமாள் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு, இது போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என மத்திய, மாநில அரசுகளை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Gas Leak Boiler Accident death one


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->