சென்னை: வாயு கசிந்த தனியார் பள்ளி தற்காலிமாக மூடல்! - Seithipunal
Seithipunal


சென்னை திருவொற்றியூரில் வாயு கசிந்த தனியார் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் வடக்கு வட்டார காவல் துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு செய்த பிறகு மீண்டும் பள்ளி திறப்பது குறித்து அறிவிக்கபடும் என்றும் பள்ளியின் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனியார் பள்ளியில் இருந்து பெற்றோர்களை காவல்துறை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமியும் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Gas Leak School closed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->