பொங்கல் பரிசுத் தொகையில் திடீர் திருப்பம்! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி!
Chennai HC Division order for Pongal Gift 2024
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால், தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த சில வருடங்களாக பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடமும் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மேலும் இந்த ரூ. 1,000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் நியாய விலைக் கடைகளில் வினியோகம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்றும், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகையை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மனுதாரரின் மற்றொரு கோரிக்கையான சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai HC Division order for Pongal Gift 2024