#BREAKING || இரண்டு நாள் மதுவிற்க தடை.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
chennai hc order fot new year liquor sale
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தபோது, "டிச.31ஆம் தேதி மதுபானம் விற்க ஏன் தடை விதிக்க கூடாது? என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர், புதுவையில் வரும் டிச.31ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மதுபானம் விற்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் என்று கருது தெரிவித்த நீதிபதிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய மனு மீது புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க விசாரணை சற்று நேரம் தள்ளி வைத்துள்ளது.
முன்னதாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளோம் என புதுச்சேரி அரசு வாதாடியது.
English Summary
chennai hc order fot new year liquor sale