ரேஷன் கடைகளில் மது விற்க அனுமதி, மீண்டும் கள்  விற்பனை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகளில் மது விற்பனையை செய்யவும், தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அவரின் அந்த மனுவில், தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் மது நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

டாஸ்மார்க் நிர்வாகம் சில குறிப்பிட்ட மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகளில் மது விற்பனையை செய்ய அனுமதி தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றுமுரளிதரன் தனது மனுவில் கோரிக்கை வைத்து இருந்தார்.

முரளிதரன் தாக்கல் செய்த இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கள் விற்பனைக்கான தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பரிசளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் மது விற்பனையில் முறைகேடு என்ற புகார்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC order TASMAC and Kal Case TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->