எஸ்பி வேலுமணிக்கு நிரந்தர தடை! திமுக பிரமுகரின் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிராக திமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டம் கோரி திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தொடர்ந்து வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கும், பின்னணியும்:

கடந்த சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன்ரயிலில் கர்ப்பிணியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் பேசி இருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ரயிலில் கர்ப்பிணியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக, தனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மேலும், வேலுமணி கூட்டத்தில் பேசியதை நேரில் கேட்டதால் ராஜேந்திரன் கடும் மனா உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் தனக்கு நிவாரமாக ஒரு கொடியே ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், எதிர்காலத்தில் இந்த சம்பவம் குறித்து பேசக்கூடாது என எஸ்பி வேலுமணிக்கு நிரந்தர தடை விதித்தது.

மேலும், நேரில் கேட்டதற்காக எல்லாம் நிவாரணம் கோரி வழக்கு தொடர முடியாது என்று கூறி, அவரின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC SP Velumani ADMK DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->