விதிமீறலை சரி செய்யும் வரை கட்டிட உரிமையாளரிடம் இருந்து 5 மடங்கு கட்டணம் வசூலிக்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


விதிமீறலை சரி செய்யும் வரை கட்டிட உரிமையாளரிடம் இருந்து 5 மடங்கு கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை நெற்குன்றத்தில் சேர்ந்த காஞ்சனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தன்னுடைய கணவர் 1985 ஆம் ஆண்டு சென்னை நெற்குன்றத்தில் இடம் வாங்கி 2003ஆம் ஆண்டு வீடு கட்டினார் என்றும், தன்னுடைய கணவர் 2017 ஆம் ஆண்டு காலமான பிறகு ஏற்கனவே தன்னுடைய கணவர் விண்ணப்பித்திருந்த திட்ட அனுமதி விண்ணப்பம் நிலுவையில் உள்ள நிலையில், கட்டடத்திற்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டட வரன்முறை கோரி விண்ணப்பித்த மனுவும் நிலுவையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் இந்த நோட்டீசை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் அதை பரிசீலித்து தகுந்த உத்தரவை இரண்டு மாதங்களில் பிறப்பிக்க வேண்டும் எனவும், விதிமீறல் கட்டடங்களை திட்டமிட்டபடி கொண்டு வரும் வரை மின் கட்டணத்தை பிரீமியம் முறையில் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் மின் இணைப்பு துண்டிப்பதால் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள், எனவே விண்ணப்பத்தின் மீது உத்தரவு பிறப்பிக்கும் போது விதிமீறல்கள் அனைத்தும் சரி செய்யப்படும் வரை ஐந்து மடங்கு மின் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இவ்வாறு கடுமையான நிபந்தனைகள் இருக்கும் போது கட்டிட உரிமையாளர்கள், தாங்கள் திட்டமிட்டபடி விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டுமானங்களை மேற்கொள்வார்கள் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மின் திருட்டு நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போது விதி மீறலில் ஈடுபடுவோர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து திட்டமிட்டபடி விதிகளுக்குட்பட்டு கட்டுமானங்களை மேற்கொள்வார்கள் என்றும் மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸில் குறுக்கிட விரும்பவில்லை என்றும் கூறி காஞ்சனாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai High court order for New constructions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->