உத்தரவை அமல்படுத்துங்க, இல்லை இரயிலே ஓடாது - எச்சரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்.!
chennai high court order to railway department
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சோலார் விளக்குகள் அமைப்பதை தவிர்த்து மற்ற உத்தரவுகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரெயில்வே தரப்பில், "18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்குத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரத்தில் செயல்படும் ரெயில் சேவையை நிறுத்த வேண்டி வரும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த வழித்தடம் ரெயில் சேவைக்கு மிக முக்கியமானது என்பதால் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்று ரெயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், "கடினமான மலைப் பகுதியில் இந்த ரெயிலை இயக்கக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் உள்ளபோதும் கூட இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த ரெயில் வழித்தடத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளால் ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு யானைகள் வரை உயிரிழகின்றனர். ஆகவே, இந்த வழித்தடத்தில் இரவு நேரங்களில் செல்லும் ரெயில்களை 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கு குறித்த விசாரணையை ஒத்தி வைத்தனர்.
English Summary
chennai high court order to railway department