பாதுகாப்பை உறுதி செய்க.. "அனைத்து தொழில்களும் முடங்கும்".. சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோ போலி என்பது தெரியவந்தது. 

இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையிலும் எதிரொளித்தது. தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு, தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது மனிதநேயமற்ற செயலாகும். 

"ஏனெனில் நமது மக்கள் விரும்பாத வேலையை தான் இவர்கள் விரும்பி செய்கிறார்கள்.!" "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று பெயர் எடுத்தோம், இன்று எங்கே போனது சகோதரத்துவம்?" மேலும் அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டு விடும். இந்தியாவின் ஒற்றுமையும் காக்கப்பட வேண்டும்!! மக்களின் அரசாக மக்களுக்காகவே சீரிய முறையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் இயங்கி வரும் தமிழக அரசு இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என அச்சங்கத்தின் தலைவர் எம்.ரவி தனது அறிக்கையின் மூலம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Hotels association requests TNgovt to protect northern state workers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->