இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! ஆலோசனையில் முதலவர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (20.07.2024) காலை 0830 மணியளவில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவுகிறது. 

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் சத்திஸ்கர் அருகில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 20.07.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

21.07.2024 முதல் 26.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 - 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

இதற்கிடையே , நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் - நிவாரணப் பணிகள் குறித்த உத்தரவுகளைத் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

மேலும், மழை தொடரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Rain Alert TN CM Meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->