சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
Chennai including 18 districts rain
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai including 18 districts rain