பாலியல் தொல்லை | சென்னை கலாஷேத்ரா மாணவ-மாணவிகள் போராட்டம்!
chennai kalashetra college student protest
சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி சக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை கலாஷேத்ரா கலைக் கல்லூரியில் பாலியல் குற்றங்கள் நடந்து உள்ளதாக குற்றம் சாட்டி, அக்கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கலாஷேத்ரா கலைக் கல்லூரி கடந்த 1936 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் மூத்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டு வருவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட அந்த மூத்த ஆசிரியர் மீது முன்னாள் மாணவர்களும் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த இந்த கல்லூரியின் இயக்குனர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை அண்மையில் வெளியானது. அதில் அப்படியான பாலியல் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த கல்லூரி மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதலே தொடர்ந்து போராட்டத்தில் மாணவர்கள் "நீதி வேண்டும்" என்ற துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
chennai kalashetra college student protest