போதை ஊசி பயன்பாடு - பொள்ளாச்சியில் 8 பேர் கைது.!
eight peoples arrested for use drugs injuction
பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய எட்டு பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீசாருக்கு மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் போலீசார் சிலரிடம் போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் இமா மணி, சேக்பரி, சலீம், நந்தகுமார், பாபா இப்ராஹிம், முஸ்தபா, முகமது அலி, ரத்னகுமார் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்லடம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருந்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eight peoples arrested for use drugs injuction