நாகர்கோவில் அருகே கார் தலை குப்புற கவிழ்ந்தது விபத்து..அதிஷ்ட்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்!
Car overturns near Nagercoil The young men who luckily survived
நாகர்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் ஓன்று சாலை அருகில் நின்றிருந்த மின் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்த நேரம் சாலையில் வாகனங்களோ ஆள் நடமாட்டமோ இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் ,நாகர்கோவில் அருகே உள்ள வெட்டுன்னிமடம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் ராஜாக்கமங்கலம் பகுதியில் நடைபெற்ற தனது நண்பருடைய இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது நாகர்கோவிலை நோக்கி கார் வந்துகொண்டிருந்தது.அப்போது புன்னைநகர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென ஏ ஆர் கேம்ப் சாலையில் செல்வதற்காக திரும்பியுள்ளார்.
அப்போது அவர் மீது கார் மோதாமல் இருக்க முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் நின்றிருந்த மின் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்த நேரம் சாலையில் வாகனங்களோ ஆள் நடமாட்டமோ இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
English Summary
Car overturns near Nagercoil The young men who luckily survived