சென்னையை கதிகலங்க வைத்த பெரியார் தெரு ரேணுகா.! 8 மணி நேரம்., மரண பயத்தை காட்டிய சம்பவம்.!
chennai manali renuka attempt suicide
சென்னை மணலி பெரியார் தெருவைச் சேர்ந்த ரமேஷ் கண்ணா என்பவரின் ரேணுகா (வயது 42). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
ரமேஷ் கண்ணா மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். ரேணுகா வீட்டில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ரமேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு காரணமாக, மன உளைச்சலில் இருந்த ரேணுகா நேற்று இரவு, தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி, 3 சமையல் கியாஸ் சிலிண்டர்களின் வால்வை திறந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதனால் பெரும் அதிர்த்தியடைந்த அந்த பகுதி வாசிகள், போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தினர். தயார் நிலையில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் நிறுத்தி வைத்தனர்.
மேலும், முதல்கட்டமாக செல்போனில் ரேணுகாவிடம் அதிமுக கவுன்சிலர் ராஜேஷ்சேகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ரேணுகா, 'யாராவது வீட்டுக்குள் வந்தால் தீ வைத்து விடுவேன்' என்று மிரட்டியதுடன், கணவரையும், அவரின் கள்ள காதலியையும் தன் முன் நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து மிரட்டினார்.
இரவு 8 மணியளவில் வீட்டின் கதவை அதிரடியாக உடைத்த தீயணைப்பு படை வீரர்கள், ரேணுகா மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் நிலைகுலைந்த ரேணுகா மயங்கி விழுந்தார்.
கியாஸ் சிலிண்டர் வால்வை அடைத்த பின்னர் மயங்கி கிடந்த ரேணுகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேணுகாவின் 8 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த பகுதி வாசிகளும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
English Summary
chennai manali renuka attempt suicide