ஆன்லைன் ரம்மி... மருத்துவக் கல்லூரி மாணவரின் விபரீத முடிவு! போலீசார் விசாரணை.!  - Seithipunal
Seithipunal


வடசென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 23) இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

தனுஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்த போதிலும் இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார். 

இந்நிலையில் தனுஷ் தனது தந்தையிடம் ரூ. 24 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவரது தந்தை நான்காயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 4000 பணத்தை வாங்கி தனுஷ் தனது அறைக்குச் சென்று கதவை பூட்டி கொண்டார். 

பின்னர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த தனுஷின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். 

இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai medical college student commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->