சென்னை மக்களே ரெடியா? அசத்திய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்! கூடவே ஒரு நல்ல செய்தி! - Seithipunal
Seithipunal


சென்னை ஓக்கியம் மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பாதையை விரிவாக்கம் செய்வது மற்றும் பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பருவமழை முடிந்த பிறகு புதிய பாலம் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரெயில், நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, ஓக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் ஐந்து வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, நீர்வழி பாதையை விரிவாக்கப்படும் மற்றும் அங்கு இருக்கும் பழைய பாலம் புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு இடிக்கப்படும்.

டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது: அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. 

இதனை சரி செய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர் இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இரு பக்கங்களிலும் மூன்று கூடுதல் வழிச்சாலைகளுக்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும்.

இரண்டு பக்கங்களிலும் இரண்டு வழிசாலைக்கான அடித்தள வேலைகள் நிறைவடைந்துள்ளன. ஓக்கியம் மடுவு நீர்வழியை சுத்தம் செய்வது சென்னை மெட்ரோ இரயிலின் முக்கியப் பொறுப்பாக இருந்தது, தற்போது அதுவும் முடிவடைந்துள்ளது, மேலும் பருவமழை காலத்தில் அதிக நீர்வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 14, 2024 அன்று பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டதை சென்னை மெட்ரோ இரயில் குறிப்பிட விரும்புகிறது. மழைக்கு முன்பும் பின்பும் எடுத்த படங்கள், நீர்வழியின் மேம்பட்ட திறனை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் வரவிருக்கும் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. பருவமழைக்கு பிறகு மீதமுள்ள சாலைப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Metro CMRL Chennai Rains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->