மொத்தம்  84.33 லட்சம் பேர்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 84.33 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 21ம் தேதி 3,27,110 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.05.2024 முதல் 30.05.2024 வரை மொத்தம் 84,21,072 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 21.06.2024 அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஜூன் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,05,316 பயணிகள் (Online QR 1,86,140; Static QR 2,55,839; Paper QR 21,30,806; Paytm 4,06,230; Whatsapp - 4,33,352; PhonePe - 2,72,300; ONDC 20,649), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 31,33,011 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3,757 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 15,61,001 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Metro train report june 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->