சென்னை மெட்ரோ ரெயில் பயணசீட்டில் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஒரு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ரெயில் சேவை பயணிகளிடையே நல்வரவை பெற்றதுடன் பயன்பாட்டையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த 23 ஆம் தேதி மட்டும்  2,81,503 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 

அதிலும் குறிப்பாக, புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் 
நிலையத்தில் 23,745 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 14,938 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், அதிகபட்சமாக பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை வாங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கியுஆர் குறியீட்டை பயன்படுத்தினால் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கபடுகிறது. 
  
சென்னை மெட்ரோ இரயில் பயண சீட்டுகளை நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai metro train ticket 20% discount


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->