சீமான் டிவிட்டர் விவகாரம் | எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை! எச்சரிக்கை விடுத்த சென்னை போலீஸ்!
Chennai Police Statement About Seeman NTK Twitter account ban issue
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கம் நேற்று முடக்கப்பட்டது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.
இதற்கு சென்னை போலீசாரும், திமுகவும் தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், "நாம் தமிழர் சீமான், மே17 திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கங்களை முடக்கப்பட்டது, கருத்துரிமைக்கு எதிரானது" என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் சீமான் டிவிட்டர் பக்கம் முடங்கியதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியான நிலையில், அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக சென்னை போலீசாரும் மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதில், "நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக வலைதள பக்கங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.
English Summary
Chennai Police Statement About Seeman NTK Twitter account ban issue