சென்னை மக்களே உஷார்! 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!  - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் சென்னையில் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: ஈக்காட்டுத்தாங்கல், கே கே நகர், கிண்டி, அசோக் நகர் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கூட இந்த பகுதிகளில் மழை பெய்திருந்தது. 

சென்னையில் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது. 

மேலும், போரூர், வளசரவாக்கம், முகலிவாக்கம், மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தற்போது பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரம் வரை (இரவு 7 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Rain Alert Tamilnadu Weather Udpate today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->