சின்னத்திரை சீரியல் மேனேஜர் மீது ஆசிரியை பாலியல் பலாத்கார புகார்.. நாடகக்காரனின் பகல் நாடகம்.!
Chennai Serial Manager Against Complaint by Woman Kalaiselvi Sexual Abuse and Cheating 5 July 2021
ஆசிரியை வழங்கிய பாலியல் புகாரில் சிக்கிய சின்னத்திரை மேலாளர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியை சார்ந்தவர் கலைச்செல்வி (வயது 30). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதன்போது, அந்த தொடரின் மேலாளர் ரகு (வயது 53) என்பவர், ஆசிரியை கலைச்செல்வியிடம் தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தனது மனைவி இருந்துவிட்டார், தனிமையில் தவித்து வருகிறேன் என்று பல டயலாக்கையும் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.
இதில் ஏமாற்றமடைந்த ஆசிரியை, ரகு அழைத்த இடத்திற்கெல்லாம் சென்று வந்துள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், 4 முறை இதனால் கலைச்செல்வி கர்ப்பமாகியும் கட்டாய கருக்கலைப்பு நடந்துள்ளது.
ஒருகட்டத்தில் ஆசிரியை தனக்கு நடந்த கொடுமைகளை வெளிஉலகிற்கு கொண்டு வர முயற்சிக்கையில், அவருக்கு பைத்தியக்கார பட்டம் கட்டியும், நடத்தை சரியில்லாத பெண்மணி என்றும் சித்தரித்து இருக்கிறான்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய ஆசிரியை கலைச்செல்வி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே, நீதிபதிகளின் உத்தரவின் பேரில் தாம்பரம் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சின்னத்திரை மேலாளர் ரகு மற்றும் அவரது உறவினரான வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் என்பவரையும் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Serial Manager Against Complaint by Woman Kalaiselvi Sexual Abuse and Cheating 5 July 2021