சென்னை: ஸ்பா பெயரில் பாலியல் தொழில்! போலீசாரின் வேட்டையில் சிக்கிய 4 பேர்! - Seithipunal
Seithipunal


திருவான்மியூர் பகுதியில் உள்ள ஸ்பா நிலையத்தில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (08.11.2024) காலை, திருவான்மியூர், மேற்கு காமராஜர் நகர், 5வது பிரதான சாலையில் உள்ள ஒரு ஸ்பா நிலையத்தை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா நிலையத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய அரவிந்த், தொண்டையூர், மேலையூர், இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். 
அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்கள்
மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அரவிந்த் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thiruvanmiyur Spa Illegal Activity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->