திருவண்ணாமலை - சென்னை புதிய ரயில் சேவை திடீர் ரத்து.. அதிர்ச்சியில் பயணிகள்.!
Chennai thiruvannamalai new train service cancelled
திருவண்ணாமலை மற்றும் சென்னை இடையே புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை இருந்து சென்னைக்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனால் ஆன்மீக தளமான அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பயணிகளும் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை சென்னை இடையே தொடங்கப்பட்ட புதிய ரயில் சேவை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நான்கு மணிக்கு திருவண்ணாமலை இரந்து புறப்பட வேண்டிய ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ரயில் சேவை நிறுத்தி வைப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பொது மக்களின் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தொடங்கப்பட்ட ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai thiruvannamalai new train service cancelled