சட்டென்று மாறிய வானிலை... சென்னையில் அதிகாலை பெய்த மழை.!
Chennai today rain
தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெடுத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள் தமிழக உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இன்று முதல் 23ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெப்பம் தாங்காமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.