குடிக்க தண்ணி இல்லாதா பேரவலம் | சென்னை பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள் மெரினா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர் வசதியை மேம்படுத்தி தரக்கோரி மாணவர்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணிக்கு விடுதிக்கு வர வேண்டும் போன்ற விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவ பேரவை தேர்தலை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் காலை முதல் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.‌ துணைவேந்தர் அறையையும் முற்றுகையிட்டனர்.

இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மாணவர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai University Student protest 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->