#சென்னை : கஞ்சா போதையில் தன் வீட்டையே கொளுத்திக் கொண்ட இளைஞர்..!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர பகுதியில் காசிமேடில் ஜாமல் என்பவர் நான்காவது தெருவில் வசித்து வருகிறார். இவரது தம்பி அபுஹாலித் மற்றும் தாய் அதே பகுதியில் இரண்டாவது மாடியில் வசித்து வருகின்றனர்.

தம்பி கஞ்சா போதைக்கு அடிமையானதால், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மதிய நேரத்தில் அபுஹாலிக் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அப்போது தாய் வெளியே சென்றுள்ள நிலையில், செல் போனில் இருந்து தாயை அழைத்து தான் வீட்டைக் கொளுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த தாய் விரைந்து வீட்டிற்கு வந்த போது புகையாக வெளியேறி உள்ளது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் வந்து பற்றிய தீயை அரை மணி நேரத்தில் அணைத்துள்ளனர். தீ விபத்தில், வீட்டில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும், கட்டில் உள்ளிட்ட மரச் சாமான்கள், எறிந்து விட்டுன. 

அபுஹாலித் அதிர்ச்சி வசமாக வீட்டில் இருந்து வெளியேறி விட்டதால், உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை. இதனை தொடர்ந்து, போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Youngster fired his own house in Kaskmedu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->