நீதிபதிகள் பணிக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தலாமே.! சென்னை உயர்நீதிமன்றம் யோசனை.!!
ChennaiHC opined annual examination may held to for district judges vacancy
சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் இந்த பணிக்கு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு அறிவிப்பு வெளியான நாளில் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக நீதிபதிகள் தேர்வு நடைபெறாத நிலையில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் இதே கோரிக்கைகளுடன் மற்றவர்களும் வழக்கு தொடரக் கூடும். இதனால் தேர்வு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் தங்களது தீர்ப்பில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையிலேயே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நிலுவை வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வை ஆண்டு தோறும் நடத்துவது குறித்து தமிழ்நாடு தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
English Summary
ChennaiHC opined annual examination may held to for district judges vacancy