அதிமுக ஆட்சியின் டெண்டர் முறைகேடு வழக்கு.!! 6 வாரம் கெடு விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இதனால் டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்களும் தங்கள் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரணை நடத்திய போது அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும் அரசு தரப்பில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குற்றச்சாட்டு இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC ordered file charge sheet in 6 weeks in tender case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->