பொதுநல வழக்கின் நேர்மையை நிரூபிக்க வேண்டும்.. மனுதாரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ஸ்ரீரங்கம் கோயில் உட்பட தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிராக பொதுநல வழக்கு கொடுத்து வருகிறார். அவ்வாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக 7 வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரர் தனது பொது பொதுநல வழக்கில் நேர்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ரங்கராஜன் நரசிம்மன் தான் தொடர்ந்த 7 வழக்குகளின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா ரூ50,000 வீதம் ரூ.3.5 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொதுநல வழக்குகளின் நோக்கம் நியாயமானது தான் என்று நிரூபணம் ஆனால் மட்டுமே அந்த டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும் எனவும், இல்லையென்றால் அந்தத் தொகை அபராதமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்காகவும், அரசுக்கு எதிராகவும் பொதுநல வழக்கு தொடுப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC ordered public interest litigant must prove honesty


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->