கனகசபை விவகாரம்.. கதவை உள்பக்கமாக பூட்டிய தீட்சிதர்கள்.. சிதம்பரம் கோயிலில் மீண்டும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு 24 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு கோவிலின் பொது தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. 

அதனை கடந்த 24ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சரண்யா அரசாணைக்கு எதிராக பதாகை வைக்கப்பட்டுள்ளதாக கூறி அகற்ற முற்பட்டபோது தீட்சதர்களுக்கும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் தேரோட்டம் மற்றும் இன்று தரிசனம் முடிந்த சிறிது நேரத்தில் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலை துறையின் துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் பொறுப்பு கோட்டாட்சியர் பூமா மற்றும் காவல்துறையினர் உதவியுடன் பதாகை அகற்றப்பட்டது. 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினர். 

இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சிதம்பரம் கோயில் கனகசபையின் மீது பொதுமக்கள் மற்றும் பக்தர்களை ஏற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று கருவறைக்குள் விலை உயர்ந்த ஆபரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது கோவில் நடை திறக்க முடியாது என உள்பக்கமாக பூட்டி உள்ளனர். இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிதம்பரம் கோயிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram Nataraja temple Kanakasabha issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->