சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல! அமைச்சர் சேகர்பாபு பகிரங்க எச்சரிக்கை!
Chidambaram Nataraja temple not belong to Dikshitars
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவானது அல்ல மற்றும் கோவில் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "இந்து கோயில்களில் தவறு எங்கு நடந்தாலும் அதை சுட்டிக் காட்டும், தட்டி கேட்கும் கடமை இந்து சமய அறநிலைத்துறைக்கு உள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை, அத்துமீறலும் செய்யவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவானது அல்ல, மன்னர்களால் நமது முன்னோர்களால் உருவானது. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் நிலங்கள் அரசுக்கு சொந்தமானது.

சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி கோவிலின் பாரம்பரிய அழகை சிதைத்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருமானங்கள், சொத்துக்கள், நகைகள் ஆய்வு செய்வது அறநிலையத்துறையின் கடமை. அதற்கு தீட்சிதரகள் ஒத்துழைப்பு தர வேண்டும். நிர்வாக குளறுபடி குறித்தான அறநிலை துறை அதிகாரிகளின் கேள்விக்கு பதில் அளிப்பது அவர்களின் கடமை.
அறநிலையத்துறை அதிகாரிகளின் பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இது குறித்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் நாங்களும் எடுத்துச் சொல்ல தயாராக இருக்கிறோம்" என அமைச்சர் சேகர்பாபு தீட்சிதர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Chidambaram Nataraja temple not belong to Dikshitars