சிதம்பரம் கோவிலின் கனகசபை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.!!
Chidambaram temple kanakasabha darshan devotees allowed
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு கோவிலின் பொது தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலை துறை அதிகாரி சரண்யா கடந்த ஜூன் 24ஆம் தேதி டீச்சர்கள் சார்பில் வைக்கப்பட்ட பதாகையை அகற்ற முற்பட்டார். இதன் காரணமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆனி திருமஞ்சன விழாவின் கடைசி நாளான நேற்று பக்தர்களை கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி தீட்சிதர்களுடன் இந்து சமய அறநிலைத்துறை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உதவியுடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனால் தீட்சிதர்கள் கோவிலுக்குள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆனி திருமஞ்சன விழா நேற்று முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் பக்தர்கள் கனகசபையின் மீது ஏரி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் முடிவடைந்த உடன் பக்தர்கள் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தீட்சிதர்கள் அறிவித்தபடி கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
English Summary
Chidambaram temple kanakasabha darshan devotees allowed