15 வயது சிறுமிக்கு திருமணம்.. சிதம்பரம் தீட்சிதர்கள் கைது.!  - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்கின்ற ஒரு தீட்சிதர் வீட்டில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக கூறி கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகள் இதுபற்றி ரகசிய விசாரணையை மேற்கொண்டனர். 

இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரான சித்ரா இரவு சிதம்பரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். 

அந்த புகாரில் சித்ரா, "சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமிக்கு கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி சிதம்பரம் கீழவீதி பகுதியில் இருக்கும் பாடசாலை மண்டபத்தில் திருமணம் நடைபெற்றதாகவும். 5ஆம் தேதி வேறொரு திருமண மண்டபத்தில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும். இது குறித்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றும் தெரிவித்து இருந்தார். 

இதனை தொடர்ந்து. போலீசார் விசாரணை நடத்தியதில் பானு சேகர், சிவராமன் மற்றும் கபிலன் உள்ளிட்ட மூன்று பேரை குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidhambaram dheekshidhar arrested for child marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->